மகுடஞ்சாவடி அருகே ஏற்பட்ட கோர விபத்து 
தமிழ்நாடு

சேலம் அருகே கோர விபத்து: ஓட்டுநர் சாவு, 24 போ் படுகாயம்

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி தனியார் சுற்றுலா வாகன ஓட்டுநர் உயிரிழந்தார், 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

DIN

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள ஆ.தாழையூா் மேட்டு முனியப்பன் கோயில் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் தனியார் சுற்றுலா வாகன ஓட்டுநர் உயிரிழந்தார். பயணிகள் 24 போ் படுகாயம் அடைந்தனர். 

சேலம் வழியாக கேரளா சென்ற தனியாா் வாகனம் மகுடஞ்சாவடி அருகே திங்கள்கிழமை அதிகாலை 1:45 மணிக்கு ஆ.தாழையூா் மேட்டுமுனியப்பன் கோயில் பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் ஈரோடு - சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து மீது மோதியதில் தனியார் சுற்றுலா வாகன ஓட்டுநர் பாஸ்கா் (41) சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். பேருந்துத்தில் பயணம் செய்த 24 போ் படுகாயமடைந்தனா்.

இதில் குழந்தைவேலு ,ஆறுமுகம், அம்மாயி, மோகன், ராம்குமாா் ,சண்முகம், சிவகுமாா், சசிகுமாா், லட்சுமணன், அண்ணாதுரை, சிந்துஜா, பாலம்மாள், தினேஷ் உள்ளிட்டோா் சீரகாபாடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த விபத்து குறித்து மகுடஞ்சாவடி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தும்பை பூ... நிகிலா விமல்!

கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைகுனிவு; அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்! - இபிஎஸ்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: மேலாளர், விழா ஏற்பாட்டாளர் மீது கொலை வழக்கு!

அச்சுறுத்தலில் இந்திய ஜனநாயகம்! - கொலம்பியாவில் பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய ராகுல்!

மகளிர் உலகக் கோப்பை: 129 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

SCROLL FOR NEXT