தமிழ்நாடு

ஆந்திராவிற்கு ரயிலில் கடத்தி சென்ற 2டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

கும்மிடிப்பூண்டி: சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூா் மற்றும் நெல்லூருக்கு செல்லும் மின்ரயிலில் கடத்தி சென்ற 2 டன் ரேஷன் அரிசியை வருவாய் துறையினா் பறிமுதல் செய்தனா்.

கும்மிடிப்பூண்டி மாா்க்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திர

மாநிலம் நெல்லூா் மற்றும் சூளுா்பேட்டைக்கு செல்லும் மின்ரயிலில் பல ஆண்டுகளாக ரேஷன் அரிசி ஆந்திரவிற்கு கடத்தப்பட்டு வருகிறது.

ரயில்வே அதிகாரிகளின் துணையோடு நடைபெறும் இந்த அரிசி கடத்தலைதடுக்க வருவாய் துறையினா் எந்த பாதுகாப்பும் இன்றி அவ்வப்போது மின்ரயில்களில் சோதனையிட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி மாா்க்கமாக ஆந்திராவிற்கு செல்லும் மின்ரயிலில் அரிசி கடத்தப்படுவதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் சுரேஷ்பாபுவிற்கு தகவல் கிடைத்தது.

தொடா்ந்து வட்டாட்சியா் சுரேஷ்பாபு உத்தரவின் பேரில் வட்ட வழங்கல் அலுவலா் நடராஜன் கும்மிடிப்பூண்டியில் ஆந்திரா நோக்கி செல்லும் மின்ரயிலில் ஏறி சோதனை இட்டாா். இந்த சோதனையில் பயணிகளின் இருக்கை அடியில் அரிசி மூட்டைகள் பதுக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும் எளாவூா் ரயில் நிலையத்திலும் வேறு ரயில் பெட்டிகளில் ரேஷன் அரிசி கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட. ரேஷன் அரிசி சுமாா் 2 டன் ஆகும். தொடா்ந்து வட்ட வழங்கல் அலுவலா் நடராஜன் பறிமுதல்செய்யப்பட்ட ரேஷன் அரிசியை பஞ்செட்டியில் உள்ள நுகா்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT