தமிழ்நாடு

சர்க்கரைக்கான ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அரிசி ரேஷன் அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு

DIN

சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி சர்க்கரை ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் இன்று முதல் நவ.26 வரை http://tnpds.gov.in என்ற இணையதளத்திலும், வட்டவழங்கல் அதிகாரியிடமும் சென்று தங்களுடைய தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 19,491 சர்க்கரை குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT