தமிழ்நாடு

ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கூட்டுறவு சங்க தகவல்களைப் பெற முடியாது

DIN

லால்குடி: கூட்டுறவு சங்க விஷயங்களில் விவசாயம் மட்டுமின்றி வணிகமும் சம்பந்தபட்டிருப்பதால் ரகசியம் காக்க வேண்டி, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை பெற முடியாதென தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் எம். ராஜேந்திரன் கூறினார்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே எம்.ஆர்.பாளையம் பகுதியில் அமைந்துள்ள நாலந்தா வேளாண்மைக் கல்லூரி கட்டட திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் எம். ராஜேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: 1960}ஆம் ஆண்டிற்கு முன் உணவு உற்பத்தி மிகக் குறைவாக  இருந்ததால், இந்தியா வெளிநாடுகளை நம்பி இருந்தது. 1968}ஆம் ஆண்டிற்கு பின் பசுமைப் புரட்சி மூலம் கிராமப்புறங்களில் விவசாயத்தினை ஊக்குவித்ததின் விளைவாக எண்ணெய் உற்பத்தியை தவிர உணவு உற்பத்தியினை உள்நாட்டிலேயே அதிகளவில் நிறைவு செய்துகொண்டோம்.   

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் அதிகளவில் வேளாண் கல்லூரிகளை தொடங்கியுள்ளோம்.  உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதைத் தடுக்க எம்பிபிஎஸ் முடித்த, ஆய்வகநுட்பம்  பெற்ற மருத்துவர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. கூட்டுறவு சங்கங்கள் விவசாயம் மட்டுமின்றி வணிகமும் சம்மந்தப்பட்டிருப்பதால் ரகசியம் காக்க வேண்டி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை பெறமுடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT