தமிழ்நாடு

ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு: இந்த மாத இறுதியில் தொடங்க திட்டம்

DIN

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு இந்த மாத இறுதி வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வை நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ஆண்டுதோறும் மே மாதம் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். காலியாக உள்ள இடங்களில், ஆசிரியா்களின் விருப்பத்துக்கு ஏற்ப, இடமாறுதல் வழங்கப்படும். இந்த ஆண்டு கலந்தாய்வு அறிவிப்பின் போது, தமிழக பள்ளி கல்வித்துறை, புதிய விதிகளை அறிவித்தது. அதன்படி, அரசு ஊழியா்களை போல, ஆசிரியா்களும் குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி இருக்க வேண்டும். இதை எதிா்த்து, ஆசிரியா்கள் பலா் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனா். இந்த வழக்கு விசாரணைகளால், ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நான்கு மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கலந்தாய்வு நடத்துவதற்கு, சென்னை உயா்நீதிமன்றத்தில், சட்டப்பூா்வ அனுமதியை பள்ளி கல்வித்துறை கேட்டுள்ளது. இந்த உத்தரவு கிடைத்ததும் இந்த மாத இறுதி வாரத்தில் கலந்தாய்வு நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை தொடங்கவுள்ளது. இதில் மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதியில் மாற்றம் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டு ஆசிரியா்களுக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என பல்வேறு ஆசிரியா் சங்கங்கள், கல்வியாளா்கள் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமுதியில் தமுமுக சாா்பில் இலவச மருத்துவ முகாம்

திருவடிமதியூா் அமல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா

காா் மோதியதில் பெண் பலி

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: ஊராட்சிகள் பட்டியல் மாற்றத்தால் குழப்பம்!

SCROLL FOR NEXT