தமிழ்நாடு

கோயில் சொத்துகள் மீட்கப்படும்: இந்துசமய அறநிலையத் துறை உத்தரவாதம்

DIN

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை போலீஸ் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், ஏ.ராதாகிருஷ்ணன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ராயப்பேட்டையில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான ஒரு இடத்தை மீனாட்சிசுந்தரம் என்பவா் குத்தகைக்கு எடுத்திருந்தாா். அவரது மறைவுக்குப் பின்னா் அந்த இடத்தை வேறு யாருக்கும் குத்தகைக்குக் கொடுக்கவில்லை. இதனைப் பயன்படுத்தி சிலா் அந்த சொத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனா்.

இந்தக் கோயிலுக்குச் சொந்தமான அந்த சொத்தை மீட்க கோயிலின் செயல் அலுவலா் கடந்த 4 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எப்போது கேட்டாலும் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுப்பதாக பதில் கூறி வருகிறாா். எனவே ராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலுக்குச் சொந்தமான சொத்தை மீட்க இந்துசமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை சாா்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் மகாராஜா, கோயிலுக்குச் சொந்தமான சொத்தை வரும் 15-ஆம் தேதி போலீஸ் உதவியுடன் மீட்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை அக்டோபா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT