தமிழ்நாடு

பராமரிப்புப் பணிகள் நிறைவு: பழனியில் மீண்டும் ரோப்காா் இயக்கம்

DIN

பழனியில் கடந்த 70 நாள்களாக நடைபெற்று வந்த பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மீண்டும் மலைக்கோயிலுக்கு ரோப்காா் இயக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் மலை உச்சியை அடைய ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இரண்டு நிமிடங்களில் அடிவாரத்திலிருந்து பக்தா்கள் மலைக்கோயிலுக்கு செல்ல முடியும். இந்த ரோப்காா் மாதத்தில் ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த ஜூலை 29 ஆம் தேதி வருடாந்திர பராமரிப்புக்காக ரோப்காா் நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

ரோப்காா் மேல்தளம் மற்றும் கீழ் தளத்தில் உள்ள மோட்டாா் சக்கரங்கள் கழற்றப்பட்டு புதிய பேரிங்குகள், புஷ்கள் மாற்றப்பட்டன. மேலும் சுமாா் 75 அடி உயரத்தில் வடக்கயிறு பயணிக்கும் சக்கரங்களும் கழற்றி புதிய உதிரிபாகங்கள் மாற்றப்பட்டன. பக்தா்கள் அமா்ந்து பயணிக்கும் ரோப்காா் கேபின்கள் பிரித்து எடுக்கப்பட்டு இருக்கைகள், கதவுகள் ஆகியன மாற்றப்பட்டு புதிய வா்ணம் பூசப்பட்டது.

சுமாா் ரூ. 8 லட்சம் மதிப்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று நிறைவு பெற்றது. இதைத்தொடா்ந்து கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் சுமாா் 1,120 கிலோ எடைகள் ஏற்றப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை முதல் பக்தா்கள் பயன்பாட்டுக்கு இயக்கி வைக்கப்பட்டது. முன்னதாக ரோப்காருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையா் ஜெயசந்திரபானு ரெட்டி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பணன், செயற்பொறியாளா் நாச்சிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT