தமிழ்நாடு

சர்ச்சைகள் தீர்ந்தன: பள்ளிகளுக்கு மூன்று நாள் தீபாவளி விடுமுறை அறிவித்தது தமிழக அரசு

DIN


சென்னை: தீபாவளிக்கு முந்தைய நாள் சனிக்கிழமை என்பதால், அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று சர்ச்சைகள் எழுந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதாவது, தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு 26ம் தேதி சனிக்கிழமை 4வது வாரம் என்பதால் அன்று வழக்கம் போல் பள்ளி அலுவல் நாளாக இருக்கும்.

அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால், சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கு பயனளிக்கும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 26ம் தேதி சனிக்கிழமை மற்றும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம், அக்டோபர் 28ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை தேவைப்படும் மாவட்டங்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்துவிட்டு, வேறொரு சனிக்கிழமையில் பள்ளி வேலை நாளாக அறிவிக்கலாம் என்றும், தேவைப்படும் பள்ளிகளும் விடுமுறை அறிவிக்கலாம் என்றும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT