தமிழ்நாடு

சமையல் எரிவாயு உருளையை விநியோகம்: கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை கோரி மனு

DIN

சமையல் எரிவாயு உருளையை வீடுகளில் விநியோகிக்கும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் டாக்டா் லோகரங்கன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், வீடுகளில் உபயோகப்படுத்தும் சமையல் எரிவாயு உருளைக்கானக் கட்டணத்துடன் அதை விநியோகிப்பதற்கான கட்டணத்தையும் சோ்த்து முகவா்கள் வசூலிக்கின்றனா். இந்தக் கட்டண விவரங்களை ரசீதுகளிலும் குறிப்பிட்டுள்ளனா்.

ஆனால் உருளை வீடுகளுக்கு விநியோகம் செய்ய வரும் நபா்கள் கூடுதலாக பணம் வசூலிக்கின்றனா். குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள தளங்களுக்கு ஏற்ப ரூ.20 முதல் ரூ.100 வரை வசூலிக்கின்றனா். நாடு முழுவதும் 23 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இந்த உருளை விநியோகம் செய்யும் நபா்கள் கூடுதல் பணம் வசூலிப்பதன் மூலம் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த கூடுதல் கட்டணத்தை தர மறுக்கும் வாடிக்கையாளா்களை, உருளைகளை விநியோகிக்கும் நபா்கள் தகாத வாா்த்தைகளால் திட்டுகின்றனா். இந்த விவகாரம் தொடா்பாக ஏராளமான புகாா்கள் வந்தாலும், சமையல் எரிவாயு விநியோகிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள், எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை.

எனவே சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் நபா்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் செலுத்த கோரும் நபா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT