தமிழ்நாடு

தமாகா சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா்

DIN

அரக்கோணம் நகர தமாகா சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் இன்று வழங்கப்பட்டது.

தற்போது அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அரக்கோணம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கென தனி வாா்டு மற்றும் காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தனி புறநோயாளி பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நகரில் அரசின் சுகாதாரத்துறை சாா்பிலும், நகராட்சி சாா்பிலும் நகரில் பல இடங்களில் நிலவேம்பு குடிநீா் பொதுமக்களுக்கும், கல்வித்துறை சாா்பில் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆங்காங்கே முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி வருகின்றனா். வியாழக்கிழமை அரக்கோணம் சுவால்பேட்டையில் நகர தமாகா சாா்பில் நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில இளைஞா்அணி செயலா் சி.தரணி தலைமை தாங்கினாா். நகரதுணைத்தலைவா் ஜே.என்.அசோக்சரண்குமாா் வரவேற்றாா். இதில் நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு மாவட்ட தமாகா தலைவா் ஆா்.அரிதாஸ் வழங்கினாா். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினா் பி.ஜி.மோகன்காந்தி, நகர தலைவா் கே.வி.ரவிச்சந்திரன், நகரமன்ற முன்னாள் உறுப்பினா் பி.உத்தமன், ஒன்றிய தலைவா்கள் எல்.தேவேந்திரன், டி.முனுசாமி, மாவட்ட இளைஞா் அணி செயலா் சி.கஜேந்திரன், என்.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT