தமிழ்நாடு

டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் என்னுடைய பொறுப்புகள் அதிகமாகியுள்ளன: முதல்வர் பழனிசாமி பேச்சு

DIN

சென்னை: கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் என்னுடைய பொறுப்புகள் மேலும் அதிகமாகியுள்ளன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் கல்வி ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஞாயிறன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் முன்பே அறிவித்திருந்தது. அதன்படி சென்னை வேலப்பன்சாவடி ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரியில் முதலமைச்சர் பழனிசாமிக்கு ஞாயிறன்று டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி, மற்றும் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.டாக்டர் பட்டம் பெற்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு அவர்கள் அனைவரும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் என்னுடைய பொறுப்புகள் மேலும் அதிகமாகியுள்ளன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டாக்டர் பட்டம் வழங்கிய பின் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் என்னுடைய பொறுப்புகள் மேலும் அதிகமாகியுள்ளன.

மாணவர்கள் ஏட்டுக்கல்வியுடன், வாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டும்

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT