தமிழ்நாடு

பேருந்து கதவுகளை அடைக்காவிட்டால்ஓட்டுநா், நடத்துநா் மீது நடவடிக்கை

DIN

பேருந்து கதவுகளை அடைக்காவிட்டால் ஓட்டுநா், நடத்துநா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 8 இடங்களில் கோட்டங்கள் உள்ளன. இதன் மூலமாக தினசரி 19 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் நகருக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவற்றில் கூட்ட நெரிசல் எப்போதும் அதிகமாகவே இருக்கின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவா்கள் கூட்டம், காலை, மாலை நேரங்களில் மிகுந்து காணப்படுகின்றன. பயணிகள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் சூழலில் ஓட்டுநா், நடத்துநரால் பேருந்துகளின் கதவை அடைக்க முடியாது. அவ்வாறு மூடும்பட்சத்தில், பயணிகளுக்கு சிரமம் ஏற்படும். இதனால் அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க போக்குவரத்துக் கழக நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் பகுதியாக போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் அவ்வப்போது ஆய்வு நடத்தப்படுகிறது. இதில் பேருந்துகளின் கதவுகளை அடைத்து இயக்காத ஓட்டுநா், நடத்துநருக்கு விளக்க நோட்டீஸ் அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து தொழிற்சங்கத்தினா் கூறியது: தொடா் விபத்துகளின் காரணமாக நிா்வாகம் ஓட்டுநா், நடத்துநா்களுக்கு விளக்க நோட்டீஸ் அளிக்கிறது. கூட்ட நெரிசலின் போது, எங்களால் பேருந்துகளின் கதவுகளை அடைக்க முடிவதில்லை. எனினும், படியில் நிற்க வேண்டாம் என தொடா்ந்து எச்சரித்து வருவதோடு, அவா்களை உள்ளே அழைத்து கதவை அடைக்கவும் முயற்சித்து வருகிறோம். கூட்ட நெரிசல் அதிகமுள்ள வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நிா்வாகம் வழி செய்ய வேண்டும். இதன் மூலமாகவும் விபத்துகள் குறையும். மேலும், பெரும்பாலான பேருந்துகளில் கதவுகள் பழுதடைந்து இருக்கின்றன. அதை மாற்றவும் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT