தமிழ்நாடு

கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி: டிசம்பர் 16-க்குள் அனுப்பலாம்

DIN

திருநெல்வேலி தனித்தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் நடைபெறும் கல்லூரி மாணவர்-மாணவிகளுக்கான மாநில அளவிலான ஆய்வுக் கட்டுரைப் போட்டிக்கு டிசம்பர் 16-ஆம் தேதி வரை படைப்புகளை அனுப்பலாம்.
இதுகுறித்து திருநெல்வேலி தனித்தமிழ் இலக்கியக் கழகத் தலைவர் பா. வளன்அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
த.பி.சொ. அரிராம் சேட்டு நினைவு வெள்ளிச் சுழற்கோப்பைக்கான ஆய்வுக் கட்டுரைப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டில் "முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் எழுத்தோவியங்கள்' என்ற தலைப்பில் போட்டி நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம். முழு வெள்ளைத்தாளில் 60 பக்கங்களுக்கு குறையாமலும், 70 பக்கங்களுக்கு மிகாமலும் படைப்புகள் இருக்க வேண்டும். கல்லூரி முதல்வர் அல்லது பேராசிரியர் கையொப்பத்துடன் தங்கள் படைப்புகளை பா. வளன்அரசு, தலைவர், தனித்தமிழ் இலக்கியக் கழகம், 3, நெல்லை நயினார் தெரு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி 627002 என்ற முகவரிக்கு டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
சிறப்பு வாய்ந்த 3 கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT