தமிழ்நாடு

மருத்துவ மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தீவிரம்

DIN


நிகழாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணிகளை மருத்துவக் கல்லூரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனை உள்பட சில மருத்துவக் கல்லூரிகள் மட்டும் அப்பணிகளை நிறைவு செய்து, அதுகுறித்த தகவல்களை மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கும் அனுப்பியுள்ளன.
இதைத் தொடர்ந்து, சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பை விரைந்து மேற்கொள்ளுமாறு பிற மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ள வெங்கடேசனின் மகனான உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாக சர்ச்சை எழுந்தது. அதன்பேரில் 4 பேர் கொண்ட பேராசிரியர் குழுவை அமைத்து விசாரணை நடத்தியதில், அந்த மாணவர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதற்கான முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி சார்பில் அந்த மாணவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிகழாண்டு மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை ஆய்வு செய்ய அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யனும் இதே உத்தரவை தனியாக பிறப்பித்தார்.
இதையடுத்து சான்றிதழ் மற்றும் ஆவணங்களை சரிபார்க்கும் நடவடிக்கைகளை மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அடுத்த சில நாள்களுக்குள் அப்பணிகள் நிறைவடைந்து, அதுதொடர்பான விவரங்களை பல்கலைக்கழகத்துக்கும், மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கும் மருத்துவக் கல்லூரிகள் அனுப்ப உள்ளன. ஆவணங்களில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் 24 மணி நேரத்துக்குள் தகவல் அளிக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT