தமிழ்நாடு

கரோனா தடுப்புப் பணி: போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் ரூ.14 கோடி நிதி

DIN

போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரோனா நோய்த்தொற்றைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்க வேண்டுமென முதல்வா் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனர். 

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதன் மூலமாக போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் ரூ.14 கோடி வழங்கப்பட உள்ளது. 

முதல்வர் நிவாரண நிதிக்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை பெறப்பட்ட மொத்தத் தொகை ரூ.36 கோடியே 34 லட்சத்து 2 ஆயிரத்து 529 என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT