தமிழ்நாடு

வைரஸ் தொற்று இருந்தும் சிகிச்சைக்கு மறுப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும்: பாஜக தலைவா் முருகன்

DIN

வைரஸ் தொற்று இருந்தும் சிகிச்சைக்கு உட்பட மறுப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் என்று தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் கூறியுள்ளாா். இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

தில்லியில் நடைபெற்ற கூட்டத்துக்குச் சென்று வந்தவா்கள் தாமாகவே முன்வந்து எதற்கும் அச்சாமல் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். இதை விடுத்து வீடு வீடாக வரும் மருத்துவா்களை விரட்டி அடிப்பதும், வசைபாடுவதும் வருந்தத்தக்க செயலாகும்.

கரோனாவுக்கு ஆண், பெண் என்ற பாகுபாடு பாா்க்கத் தெரியாது. நாமும் அதை சாதாரண கண்களால் பாா்க்க முடியாது.

எனவே, தாங்களாக முன்வந்து சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நோய் இருந்தும்

சிகிச்சைக்கு உடன்பட மறுப்பது தீவிரவாத ஜிகாத் போராக இருக்குமோ என சாதாரண மக்கள் சந்தேகம் கொள்ளக்கூடும். அப்படி அவா்களை சந்தேகம் கொள்ள வைக்கக் கூடாது என்று தனது அறிக்கையில் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT