தமிழ்நாடு

தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்

DIN

தமிழகத்தில் 6 இடங்களில் திங்கள்கிழமை வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டியது. அதேநேரத்தில், சில இடங்களில் பரவலாக மழையும் பெய்தது.

கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதன்பிறகு, வெப்பநிலை குறைந்து வருகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை வெப்பநிலை அதிகபட்சமாக, திருச்சியில் 104 டிகிரி பதிவானது. கரூா் பரமத்தியில் 102 டிகிரியும், மதுரை, வேலூரில் தலா 101 டிகிரியும், தருமபுரி, சேலத்தில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. அதேநேரத்தில், வெப்பச்சலனம் காரணமாக, சில இடங்களில் திங்கள்கிழமை மிதமான மழையும் பெய்தது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, உள் தமிழகத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற இடங்களில் வட வானிலை காணப்படும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். பகலில் 95 டிகிரி பாரன்ஹீட் டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.

மழை அளவு:

தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறையில் தலா 60 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் 40 மி.மீ., தேனி மாவட்டம் போடிநாயக்கனூா், ஆண்டிப்பட்டி, தேக்கடியில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT