தமிழ்நாடு

சென்னையில் 149 பேருக்கு கரோனா: எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர்?

சென்னையில் புதன்கிழமை காலை 11 மணி நிலவரப்படி 149 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: சென்னையில் புதன்கிழமை காலை 11 மணி நிலவரப்படி 149 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

திருவொற்றியூர் முதல் சோளிங்கநல்லூர் வரை 15 மண்டலங்களைக் கொண்ட சென்னையில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 40 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் திருவிக நகரில் 22 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 19 பேருக்கும் கரோனா பாதித்துள்ளது. அண்ணாநகரில் 15 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 12 பேருக்கும், தேனாம்பேட்டையில் 11 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெருங்குடியில் ஐந்து பேருக்கும், திருவொற்றியூர், வளசரவாக்கம், அடையாறு, பகுதிகளில் தலா நான்கு பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 773 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கரோனா பாதிப்பு 5,194 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழப்பு 149 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 690 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

SCROLL FOR NEXT