தமிழ்நாடு

ஈரோடு: கரோனாவில் இருந்து மீண்ட 13 பேர் வீடு திரும்பினர்!

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த 13 பேர் குணமடைந்த நிலையில் இன்று வீடு திரும்பினர்.

DIN

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த 13 பேர் குணமடைந்த நிலையில் இன்று வீடு திரும்பினர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 64 ஆக உள்ளது. இவர்களில் 4 பேர் ஏற்கெனவே கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். 65 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மேலும், ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 பேரில் தற்போது 13 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் இன்று வீடு திரும்பினர். மாவட்ட ஆட்சியர் கதிரவன் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார். மேலும், மருத்துவர்கள், ஊழியர்கள் கைதட்டி அவர்களை வழியனுப்பி வைத்தனர். எஞ்சிய 46 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகம் உங்கள் கையில் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

வீட்டு மனை பட்டா கேட்டு பழங்குடி மக்கள் நல சங்கம் ஆட்சியரிடம் மனு

சம்பா பருவத்தில் 2,50,000 மெ.டன் நெல் கொள்முதலுக்கு வாய்ப்பு: விவசாயிகளிடமிருந்து மட்டுமே வாங்கப்படுமென அதிகாரிகள் உறுதி

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT