உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் 
தமிழ்நாடு

கல்லூரி பருவத் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டில் நடைபெறும்: உயர்கல்வித்துறை அறிவிப்பு

அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடப்பு கல்வி ஆண்டின் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

நடப்பு ஆண்டின் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நடப்பு ஆண்டின் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில், 'நடப்பு ஆண்டின் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடக்கப்படும். அதாவது ஜூன் மாதத்தில் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட பின்னர் முந்தைய பருவத் தேர்வு நடைபெறும், அதன்பின்னர் அடுத்த கல்வி ஆண்டின் பாட வகுப்புகள் தொடங்கும்' என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகம் உங்கள் கையில் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

வீட்டு மனை பட்டா கேட்டு பழங்குடி மக்கள் நல சங்கம் ஆட்சியரிடம் மனு

சம்பா பருவத்தில் 2,50,000 மெ.டன் நெல் கொள்முதலுக்கு வாய்ப்பு: விவசாயிகளிடமிருந்து மட்டுமே வாங்கப்படுமென அதிகாரிகள் உறுதி

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT