தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,629 ஆக உயர்வு

தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

DIN


தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,596 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 27. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 662. இன்று உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. 

இதுவரை 59,023 கரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 5,978 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 53,072 நபர்களுக்கும் இன்று மட்டும் 5,904 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு எடுத்த 5,904 பேரில் புதிதாக 33 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,629 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 23,760. மேலும், 155 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 87,159. தமிழகத்தில் 23 அரசு ஆய்வகங்கள், 10 தனியார் ஆய்வகங்கள் என 33 ஆய்வகங்கள் உள்ளன.

தமிழகத்தில் பாதிப்பு: 1,629

உயிரிழந்தோர் எண்ணிக்கை: 18

குணமடைந்தோர் எண்ணிக்கை: 662

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

வனப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை

SCROLL FOR NEXT