தமிழ்நாடு

ஆம்பூர் அருகே மலைவாழ் மக்கள் குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கிய ராணுவ வீரர்கள்

DIN

ஆம்பூர் அருகே உள்ளது வெங்கடசமுத்திரம் ஊராட்சி அத்திமாகுலப்பள்ளி கிராமம். இந்த கிராமம் மற்றும் அருகே உள்ள ராள்ளக்கொத்தூர் கிராமங்களில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்த இருளர் இன குடும்பங்கள் உள்ளன. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, வீட்டுக்குள்ளே மக்கள் முடங்கிக் கிடக்கும் நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. 

வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் இந்த மலை வாழ் மக்கள் அன்றாட தேவைகளுக்கு இப்போது அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அறிந்த
ஆம்பூர் ஜவான்ஸ்(Ambur jawans) குழுவினர் மற்றும் ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் இருக்கக்கூடிய பல்வேறு ராணுவ வீரர்களும் ஒன்றிணைந்து ஆம்பூர் பகுதியில் உள்ள இந்த மலை வாழ் மக்கள் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினர்.

இந்த இலவச பொருட்கள் வழங்கும் நிகழ்வில் மௌலி குமார்(ஏ) திவாகரன் (தேவலாபுரம்), ஜனா (காரப்பட்டு) ,தினேஷ் (தேவலாபுரம் ), ராம்குமார் (நாச்சியார் குப்பம் ), கோகுல் (ஆம்பூர்),நவீன்  (கதவாளம்), மற்றும் பல நண்பர்கள் கலந்து கொண்டனர். ஆம்பூர் பகுதியை சேர்ந்த சுமார் 50 ராணுவ வீரர்கள் இந்த குழுவில் உள்ளது இதில் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT