தமிழ்நாடு

சேலம் எடப்பாடியில் பெய்த கனமழையால் நிரம்பிய குட்டைகள்

DIN

எடப்பாடி சுற்றுவட்டாரப்பகுதியில், ஒரு வாரத்திற்கும் மேலாக, இரவு நேரங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை 
அன்று இரவு மாவட்டத்திலேயே அதிக அளவாக 38.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தொடர் கனமழையால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
எடப்பாடி பகுதியில் உள்ள பெரியஏரி, சின்னஏரி மற்றும் மோளானி நீர்தேக்கம், வாழக்குட்டைஏரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் நிரம்பி வருகிறது. எடப்பாடி சுற்றப்புற கிராம பகுதிகளான சித்தூர், செட்டிமாங்குறிச்சி , வெள்ளரிவெள்ளி , மொரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு விவசாயப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நீண்ட நாட்களுக்கு பின் உள்ளூர் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT