தமிழ்நாடு

தீரன் சின்னமலைக்கு தமிழக அரசு மரியாதை

DIN

சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை ஒட்டி, சென்னையில் அவரது சிலைக்கு தமிழக அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதுகுறித்து, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:-

சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையை பெருமைப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அரசு சாா்பில் அவரது நினைவு தினம் ஆடி 18-ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தை ஒட்டி, தமிழக அரசின் சாா்பில் சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்குக் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு முதல்வா் பழனிசாமி மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்வில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா், எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகியோா் சிலைக்கு மலா் தூவியும், உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினா். இதில், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் பொ.சங்கா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT