தமிழ்நாடு

இ-பாஸ் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர்

DIN

சென்னை: சென்னையில் இ-பாஸ் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

கரோனா பரவலைத் தடுக்க ஆறாவது ஆவது கட்டமாக பொதுமுடக்கம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளதுடன், ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கும், மாநிலத்துக்கும் செல்வதற்கு இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூரில் ரூ.1,500 கொடுத்தால் 2 மணி நேரத்தில் எந்த மாவட்டம், மாநிலத்துக்கும் இ-பாஸ் பெற்றுத்தரப்படும் என கவர்ச்சிகர விளம்பரம் வெளியிட்டு பணமோசடியில் ஈடுபட்டவரை செவ்வாயன்று காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் சென்னையில் இ-பாஸ் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘சென்னையில் இ-பாஸ் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இவ்வாறு இ-பாஸ் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் இத்தகைய இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்’ என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT