வசந்தகுமாரின் உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்படுகிறது: கே.எஸ். அழகிரி 
தமிழ்நாடு

வசந்தகுமாரின் உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்படுகிறது: கே.எஸ். அழகிரி

மக்களவை உறுப்பினர் எச். வசந்தகுமாரின் உடல், தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காமராஜர் அரங்கத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிறகு உடனடியாக சொந்த ஊர் கொண்டு செல்லப்படுவதாக கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

DIN


சென்னை: மக்களவை உறுப்பினர் எச். வசந்தகுமாரின் உடல், தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காமராஜர் அரங்கத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிறகு உடனடியாக சொந்த ஊர் கொண்டு செல்லப்படுவதாக கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தியாகராயர் நகரில் உள்ள வசந்தகுமாரின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு சத்தியமூர்த்தி பவனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், வசந்தகுமாரின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல காலதாமதம் ஆகும் என்பதால், வசந்தகுமாரின் இல்லத்தில் இருந்து அவரது உடலானது சொந்த ஊருக்கு உடனடியாக எடுத்துச் செல்லப்படுகிறது. செல்லும் வழியில் காமராஜர் அரங்கத்தில் சிறிது நேரம் வைக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த காமராஜர் அரங்கத்துக்கு விரைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT