தமிழ்நாடு

பிரணாப் முகர்ஜியின் மறைவு இந்தியாவிற்கே பேரிழப்பு: முதல்வர் பழனிசாமி இரங்கல்

DIN


முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு இந்தியாவிற்கே ஓர் பேரிழப்பு என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இரங்கல் செய்தி:

"முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் புதுதில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (31.8.2020) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பிரணாப் முகர்ஜி,  இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்து சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். இவர் நிதித் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திறம்பட செயலாற்றியவர்.

ஜெயலலிதா ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை வைரவிழா, இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா உள்ளிட்ட பல விழாக்களில் ஜெயலலிதாவுடன், தலைமை விருந்தினராக பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு சிறப்பித்தவர்.

இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவரான பிரணாப் முகர்ஜி சிறந்த பேச்சாளராகவும் விளங்கியவர். இவர் சிறந்த ஆட்சியாளராகவும், கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்புடன் பழகும் தன்மையுடையவராகவும் இருந்தார். இந்திய அரசின் உயரிய பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷன்  விருதுகளை பெற்ற சிறப்புக்குரியவர்.
    
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு இந்தியாவிற்கே ஓர் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை  பிரார்த்திக்கிறேன்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT