தமிழ்நாடு

திருக்கோவிலூரில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் மூடல்

DIN

திருக்கோவிலூரை இணைக்கும் தரைப்பாலம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்ட எல்லையில் அரகண்டநல்லூரும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆகிய எல்லையில் திருக்கோவிலூரும் அமைந்துள்ளன. இந்த இரண்டு ஊர்களுக்கும் இடையே தென்பெண்ணையாறு செல்கிறது. 

தரைப்பாலம்.

கடந்த சில நாள்களாக திருக்கோவிலூர் மணலூர் பேட்டை, அரகண்டநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் தென்பெண்ணெய் ஆற்றின் துணை ஆற துரிஞ்சல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தென் பெண்ணை ஆற்றில் ஒரு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால் அரகண்டநல்லூர்- திருக்கோவிலூரை இணைக்கும் தரைப்பாலத்தில் வெள்ள நீரில் அடித்துச் செல்கிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை அந்த தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்துள்ளது. 

தென்பெண்ணெய் ஆற்றில் போக்குவரத்தை தடை செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அரகண்டநல்லூர் போலீஸார்.

ஏற்கெனவே அங்குள்ள மேல்மட்ட பாலம் சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளதால் தரைப்பாலத்தைப் பயன்படுத்தி வந்தனர். தற்போது வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலமும் மூடப்பட்டதால்  7 கிலோமீட்டர் தூரம் சுற்றி புறவழிச்சாலை வழியாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT