தமிழ்நாடு

வேதாரண்யம் அருகே ஆற்றுக்குள் கவிழ்ந்த பெட்ரோல் நிரப்பிய லாரி பாதுகாப்பாக மீட்பு: பெரும் பாதிப்பு தவிர்ப்பு

DIN

வேதாரண்யம்:  நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆற்றுக்குள் கவிழ்ந்த பெட்ரோல் நிரப்பிய டேங்கர் லாரியை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் பாதுகாப்பாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர் மழை நீடித்து வருகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் பகுதிக்கு பெட்ரோல் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

டேங்கர் லாரி, மருதூர் தெற்கு, நடேசத்வேர் கடையடி பகுதிக்கு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இடது,   வலது பக்கமாக ஓடி, பக்கவாட்டில் செல்லும் மானங்கொண்டான் ஆற்றின் படுகையில் கவிழ்ந்தது.

மருதூர் பகுதியில் ஆற்றுக்குள்ளிருந்து பாது காப்பாக மீட்கப்பட்ட பெட்ரோல் லாரி.

சுமார் 12 ஆயிரம் லிட்டர்  பெட்ரோலுடன் லாரி கவிழ்ந்ததால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்துச் சென்ற வேதாரண்யம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள், இயந்திரங்களின் உதவியோடு பாதுகாப்பாக மீட்டனர். இதனால் பெரும் பாதிப்பு தடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT