கடலூர் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி 
தமிழ்நாடு

கடலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு: காவல் நிலையத்தில் புகார்

கடலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு துவங்கப்பட்டு இ-மெயில் மூலமாக தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருவது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

DIN



கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு துவங்கப்பட்டு இ-மெயில் மூலமாக தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருவது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்ட ஆட்சியராக சந்திரசேகர் சாகமூரி செயல்பட்டு வருகிறார். அண்மையில் Chandra Sekhar Sakhamuri IAS என்ற பெயரில் முகநூலில் கணக்கு துவங்கப்பட்டு என்ற இ-மெயில் மூலமாக தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் பெயரிலேயே இருப்பதால் அரசு உயர் அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் இதனை பார்வையிட்டு விருப்பம் தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஆட்சியரின் பெயரை தவறாக பயன்படுத்தி போலி முகநூல் கணக்கு மூலமாக பதிவு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து புதுநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், collrcud@nic.in., cudcollector@gmail.com ஆகிய மின்னஞ்சல்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் பலி!

பிப்ரவரி மாதப் பலன்கள் - சிம்மம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT