தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா பாதிப்பில்லை, மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

DIN


தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்றும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "கரோனா வைரஸ் பாதிப்புக்கான முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்த ஆலோசனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. 
 
தமிழகத்தில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களுக்கு 5543 பயணிகள் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அவர்களது இடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் எந்த மாதிரியான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்கிற வழிகாட்டுதலை மத்திய அரசு அளித்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்புள்ள சீனா மற்றும் அதை ஒட்டியுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து 646 பேரும், வைரஸ் பாதிப்புள்ள அருகே இருக்கும் நாடுகளில் இருந்து 153 பேர் என இதுவரை மொத்தம் 799 பேர் தமிழகம் வந்துள்ளனர். இவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

எனவே, அவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு தொலைபேசி வாயிலாகத் தொடர்பிலேயே உள்ளனர். 

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 10 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கரோனா வைரஸ் குறித்து எந்தவொரு அறிகுறியும் கிடையாது.

திருச்சியில் உள்ள பயணி மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள பயணி என தமிழகத்தில் மொத்தம் 12 பேர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். ஆனால், இவர்கள் யாருக்கும் வைரஸ் பாதிப்பு குறித்து எந்த அறிகுறியும் கிடையாது. அவர்களுடைய பயண விவரம் காரணமாகவே அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, யாரும் அச்சப்பட வேண்டாம். தமிழகத்தில் ஒரு நோயாளி கூட கரோனா வைரஸால் பாதிப்படையவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். அச்சம் நிறைந்த சூழலை உருவாக்கிட வேண்டாம். பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அனைத்து சாதனங்களும் நம்மிடம் தயார் நிலையில் உள்ளன.

தற்போது தீவிரக் கண்காணிப்பில் உள்ள அனைவரும் பிரத்யேக வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுதான் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT