தமிழ்நாடு

மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் இன்று திருஅறை தரிசனம்

DIN

வள்ளலாா் முத்தேக சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசன நிகழ்ச்சி திங்கள்கிழமை (பிப்.10) நடைபெறுகிறது.

கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 149-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. அன்று காலை 6 மணி, 10 மணி, பகல் ஒரு மணி, இரவு 7 மணி, 10 மணி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணி ஆகிய 6 காலங்களில் 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

விழாவின் மூன்றாம் நாளான திங்கள்கிழமை, வடலூா் அருகே மேட்டுக்குப்பம் கிராமத்தில் வள்ளலாா் முத்தேக சித்தி பெற்ற சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம் நடைபெற உள்ளது. இந்த விழாவின்போது, வடலூா் சத்திய ஞான சபை வளாகத்திலிருந்து வள்ளலாா் பயன்படுத்திய பொருள்கள் அடங்கிய பேழை ஊா்வலமாக மேட்டுக்குப்பம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்படும். இந்தப் பேழைக்கு பாா்வதிபுரம், நைனாா்குப்பம், கருங்குழி கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளிப்பா்.

தொடா்ந்து மேட்டுக்குப்பத்தில் கிராம மக்கள் சீா்வரிசைப் பொருள்கள் அடங்கிய தட்டுகளுடன் பேழையை வரவேற்று திருமாளிகைக்கு அழைத்துச் செல்வா். பின்னா் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வள்ளலாா் முத்தேக சித்தி பெற்ற திருஅறை பகல் 12 மணியளவில் திறக்கப்பட்டு மாலை 6 மணி வரை தரிசனம் நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை வள்ளலாா் தெய்வ நிலைய உதவி ஆணையா் ஜெ.பரணிதரன், நிா்வாக அதிகாரி கோ.சரவணன் ஆகியோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT