தமிழ்நாடு

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்: அமைச்சர் சி.வி.சண்முகம்

DIN

நளினியை தவிர்த்து, பிறரை தூக்கிலிடலாம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சியினரெல்லாம், வெறும் வாயால் முழம் போட்டுக் கொண்டு விமர்சித்துப் பேசுவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்தார்.

விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: 

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று அரசு எதிர்பார்க்கின்றது. இந்த விவகாரத்தில் நளினியை தவிர்த்து, பிறரை தூக்கிலிடலாம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சியினரெல்லாம், வெறும் வாயால் முழம் போட்டுக் கொண்டு விமர்சித்துப் பேசுகின்றனர். 

7 பேர் விடுதலைக்காக ஆட்சிக்காலத்தில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத அவர்கள் பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்று திமுகவை விமர்சித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT