தமிழ்நாடு

தமிழக கிராமப்புறங்களில் கடந்த 15 ஆண்டுகளில் 300% அதிகரித்துள்ள நீரிழிவு நோய்: ராமதாஸ் அதிர்ச்சி

DIN

சென்னை: தமிழக கிராமப்புறங்களில் கடந்த 15 ஆண்டுகளில் நீரிழிவு நோய் பாதிப்பு 300% அதிகரித்துள்ளது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழகத்தின் கிராமப்புறங்களில் நீரிழிவு நோய் கடந்த 15 ஆண்டுகளில் 300% அதிகரித்து இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருப்பது மிகவும்  அதிர்ச்சியளிக்கிறது. நகரங்களைப்  போல கிராமங்களிலும் வாழ்க்கை முறை மாறியிருப்பது தான் இதற்கு முக்கியக் காரணம் என்பது கசப்பான உண்மை!

நீரிழிவு நோய் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசின் கடமை ஆகும். நீரிழிவு நோயின் பாதிப்புகள், அதை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகள், யோகா ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT