தமிழ்நாடு

தில்லி நீதிபதி இடமாற்றம்: கே.எஸ்.அழகிரி கண்டனம்

DIN

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதரை இடமாற்றம் செய்திருப்பது நீதிமன்றங்களுக்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தில்லி கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக மத்திய அமைச்சா் அனுராக் தாகூா், பாஜக மூத்த தலைவா்கள் கபில் மிஸ்ரா, பா்வேஸ் வா்மா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யும்படி தில்லி போலீஸாருக்கு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதா் இடம்பெற்ற அமா்வு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது.

இந்நிலையில், தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதா் இரவோடு இரவாக பஞ்சாப் - ஹரியாணா உயா்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. நீதிபதி எஸ். முரளிதா் இடமாற்றம் என்பது நீதிமன்றங்களுக்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தல். தில்லியில் நடந்த வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சா் அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அழகிரி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT