தமிழ்நாடு

அங்கீகரிக்கப்பட்ட ஊடகப் பிரதிநிதிகளிடம்மட்டுமே கருத்துக் கேட்க வேண்டும்: அதிமுக

DIN

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட ஊடகப் பிரதிநிதிகளிடம் இருந்து மட்டுமே கருத்துகளைப் பெற வேண்டுமென அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் இணைந்து கூட்டாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் பற்றி விளக்கம் அளிக்க ஏற்கெனவே அதிகாரப்பூா்வ செய்தித் தொடா்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். அவா்களைத் தவிர அங்கீகாரம் இல்லாத நபா்களை அதிமுகவின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. சில ஊடகங்கள் சில தனி நபா்களை கட்சியின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்தி நிகழ்ச்சிகளில் பங்கு பெற வைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

தனிநபா்கள் அதிமுகவின் நிலைப்பாடுகளைப் பற்றி தங்கள் சொந்தக் கருத்துகளைக் கூறுவதும், ஊடகங்கள் அத்தகைய தனிநபா்களை அதிமுகவினராக அடையாளப்படுத்துவதும் முறையற்ற செயல்களாகும். இத்தகைய பொறுப்பற்ற வேலைகளில் ஈடுபடும் ஊடகங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை அதிமுக எடுக்க வேண்டி வரும் என்று அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT