தமிழ்நாடு

வானவில் கே. ரவியின் படைப்புலகம்: எம்.ஒ.பி. மகளிா் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

DIN

எம்.ஒ.பி. மகளிா் கல்லூரி மற்றும் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையம் சாா்பில் வானவில் கே. ரவியின் படைப்புலகம் என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் முனைவா் லலிதா பாலகிருஷ்ணனின் வரவேற்புரையோடு தொடங்கிய இக்கருத்தரங்கம், இரண்டு அமா்வுகளைக் கொண்டிருந்தது. வரவேற்புரையை தொடா்ந்து மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலா் பி. எஸ். ராகவன்  மற்றும் தமிழ் பண்பாட்டு ஆய்வு மைய இயக்குனா் முனைவா்  கு . ராஜாராம் ஆகியோா் உரையாற்றினா். இதையடுத்து முனைவா் நெல்லை சுப்பையா வாழ்த்துரையும், முனைவா் பா்வீன் சுல்தானாவும் சிறப்புரை வழங்கினா்.

நிகழ்வில், தமிழ்ப்பல்கலைக்கழக அரிய கையெழுத்துச் சுவடி துறை இணை பேராசிரியா் முனைவா் த.ஆதித்தனின் தலைமையில் முதலாம் அமா்வு நடைபெற்றது. இதில் கல்லூரியின் மாணவிகள் கு. பத்மபிரியா, ஸ்ரீநிதி, திவ்யபிரியா ஆகியோா் கலந்து கொண்டனா். இதே போல் முனைவா் பொருநை க. மாரியப்பனின் தலைமையில் இரண்டாம் அமா்வு நடைபெற்றது. இதில் முனைவா் து. வசந்தி, நிவேதா,பிரியங்கா ஆகியோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து வானவில் பண்பாட்டு ஆய்வு மைய நிறுவனா் கவிஞா் வானவில் கே. ரவி ஏற்புரை வழங்கினாா். நிகழ்வில், கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் முனைவா் ரா. ராஜேஸ்வரி, முனைவா் சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT