தமிழ்நாடு

கோவை மருத்துவருக்கு கின்னஸ் சாதனை விருது

DIN

கோவை: "குழந்தையின்மையில் ஆண்களின் பங்கு' குறித்த கருத்தரங்கில் அதிக அளவிலான ஆண்களைப் பங்கேற்க வைத்ததன் அடிப்படையில் கோவை ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்தின் முதன்மை மருத்துவர் அரவிந்த் சந்தருக்கு கின்னஸ் சாதனை விருது அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின்மை சிகிச்சையில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்கும் நிலையில், முதன்முறையாக குழந்தையின்மை சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஆண்களுக்கும் ஏற்படுத்தும் வகையில், "குழந்தையின்மையில் ஆண்களின் பங்கு' என்ற தலைப்பிலான கருத்தரங்கு கோவை ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்டது. இதில் அதிக அளவிலான ஆண்களைப் பங்கேற்க வைத்ததன் அடிப்படையில் ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்தின் முதன்மை மருத்துவர் அரவிந்த் சந்தருக்கு கின்னஸ் சாதனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

"குழந்தையின்மை சிகிச்சை குறித்து ஆண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கருத்தரங்கு நடத்தப்பட்டது.  இதுபோன்ற முயற்சி முதன்முதலாக இங்குதான் மேற்கொள்ளப்பட்டது. தவிர அதிக அளவில் ஆண்கள் பங்கேற்றதும் இக்கருத்தரங்கில்தான். அதன் அடிப்படையில் கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது''  என மருத்துவர் அரவிந்த்  சந்தர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT