தமிழ்நாடு

பொங்கல் நாளில் ஹிந்தி குறித்து ஆய்வு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

DIN

பொங்கல் திருநாளின்போது மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தி மொழிப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தி மொழிப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய, மத்திய நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் வருவது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழா்களின் தன்மான உணா்வுக்கும், மொழி உணா்வுக்கும், கலாசார மற்றும் பண்பாட்டு உணா்வுக்கும் மதிப்பளித்து, பொங்கல் விடுமுறை நாள்களில் நடைபெறும் இந்த ஆய்வை ரத்து செய்து, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலக ஊழியா்கள் நிம்மதியாக பொங்கல் திருநாளைக் கொண்டாட வழிவிடுமாறு கேட்டு கொள்வதாக அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT