தமிழ்நாடு

உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பு.ரா. கோகுலகிருஷ்ணன் மறைவு

DIN


உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பு.ரா கோகுலகிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (புதன்கிழமை) காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோகுலகிருஷ்ணன், இன்று காலை 10.30 மணியளவில்  காலமானார். 

தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த இவர், பிறகு குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணிபுரிந்தார். 

இவர் குஜராத் தலைமை நீதிபதியாக இருந்தபோது இரண்டு முறை அந்த மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராகவும் இருந்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரான இவர், வரலாற்றுப் புகழ்பெற்ற பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கும் வழக்கறிஞராக வாதாடியுள்ளார். 

இவருடைய மனைவி 2005 ஆம் ஆண்டு காலமானார். இவருக்கு பி.ஜி. சுந்தரராமன், பி.ஜி. ராம்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். 

இறுதிச் சடங்குகள், 5, அண்ணா அவென்யு, பக்தவத்சலம் நகர் விரிவு, அடையாறு , சென்னை முகவரியிலுள்ள அவருடைய இல்லத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில்  நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT