தமிழ்நாடு

வருமான வரி வழக்கு: கார்த்தி சிதம்பரம், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய இடைக்கால தடை

DIN

வருமானவரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், கடந்த 2015 -ஆம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை அக்னி எஸ்டேட்ஸ் பவுண்டேசன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்தனர்.

இதன் மூலம், கிடைத்த ரூ.7.37 கோடி வருவாயை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கின் குற்றச்சாட்டுப் பதிவுக்காக செவ்வாய்க்கிழமை (ஜன.21) கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி இருவரும் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்குத் தடை விதிக்கவும், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் கார்த்தி சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி மீது  சிறப்பு நீதிமன்றம் வரும் 27ஆம் தேதி வரை குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT