தமிழ்நாடு

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து பள்ளிவாசல்களில் தேசியக் கொடி ஏற்றம்

DIN

தேச ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து பள்ளிவாசல்களில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின விழாவை கொண்டாடினர். 

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில், கடலூர் மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மத பாகுபாடு இல்லாமல் தேச ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் பள்ளிவாசல்களில் அனைவரும் ஒருங்கிணைந்து தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

கடலூர் மஞ்சக்குப்பம், சாவடி, புதுநகர், முதுநகர் என பல்வேறு இடங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று தேசிய கொடியேற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை  அனைவரும் ஒருங்கிணைந்து தேசியக்கொடிக்கு மரியாதை  செலுத்திய நிகழ்வு மத நல்லிணக்கம் மட்டுமின்றி தேச ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT