தமிழ்நாடு

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா

DIN

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் 515 பேருக்கு 93.47 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். 

மாவட்ட காவலர்கள் 39 பேருக்கும், மாநகர காவல்துறையினர் 16 பேர் என 55 பேருக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட்டது. 239 பேருக்கு பணியை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார்,, துணை ஆணையர்கள் வெ.பத்ரி நாராயணன், எஸ்.பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து ஓட்டுநா் போக்சோவில் கைது

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயில்: கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

SCROLL FOR NEXT