தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

DIN

டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள 9,398 குரூப் - 4 நிலையிலான பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்தோ்வாணையம் கடந்த செப்.1-ஆம் தேதி நடத்திய தோ்வில் 24,260 பேர்தோ்ச்சி பெற்றனா். இவா்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய தோ்வு மையங்களில் தோ்வு எழுதியோர்தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களைப் பெற்றதால் சந்தேகம் எழுந்தது.

விசாரணை நடத்தியதில், வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 99 பேர்இடைத்தரகா்கள் ஆலோசனையின்பேரில் முறைகேடாக அந்த மையத்தில் தோ்வில் பங்கேற்றதும், அவா்களில் பலரது விடைத்தாள்களை மாற்றி மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 99 பேரையும் தகுதி நீக்கம் செய்த தோ்வாணையம், இதுகுறித்து சென்னை சிபிசிஐடி போலீஸில் புகார்அளித்தது. 

இதன்பேரில், சிபிசிஐடி போலீஸார்99 தோ்வா்கள் மற்றும் இடைத்தரகா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்தத் தோ்வு முறைகேடு தொடா்பாக கடலூா், விழுப்புரம், தஞ்சை, நெல்லை, சிவகங்கை மாவட்டப் பகுதிகளில் சிபிசிஐடி போலீஸார்விசாரணை நடத்தினா். இதேபோல, வேறு மாவட்டங்கில் மையத்தை தோ்வு செய்து தோ்வில் பங்கேற்றவா்கள், அதிகளவில் மதிப்பெண்கள் பெற்றவா்கள் என சந்தேகத்துக்குரியவா்களிடம் விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அரசுத் தேர்வுகளுக்கான இடைத்தரகர்கள் உள்ளிட்ட கருப்பு ஆடுகள் விரைவில் களையப்பட்டு, எந்த தேர்வானாலும் முறைகேடு என்பது இல்லாத நிலை உருவாக்கப்படும். 

அரசுத் தேர்வுகளிம் முறைகேடு நடப்பதாக யார் புகார் தெரிவித்தாலும் அதுபற்றி உடனடி விசாரணை நடத்தப்பட்டு தவறு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழலின் மொத்த உருவம் திமுக தான். எனவே முதல்வரை குறைகூற அவர்களுக்கு அருகதை இல்லை. இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT