தமிழ்நாடு

சிதம்பரத்தில் உலக நன்மையை கருதி ருத்ர ஹோமம்

DIN

சிதம்பரம் குருஐயர் தெருவில் உள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஸ்ரீஅவதூத சுவாமிகளின் 55-வது ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு உலக நன்மையை கருதி ருத்ர ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது. கரோனா ஊரடங்கை முன்னிட்டு சமூக இடைவெளியை பின்பற்றி குறைந்தளவான பக்தர்கள் பங்கேற்றனர்.

அவதூதம் என்பது துறவறத்தில் ஒரு நிலையாகும். சிதம்பரத்தில் தவம் புரிந்து சமாதி அடைந்து மக்களுக்கு அருள் புரிந்து வருபவர் மகான் ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள். ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகளின் பிரதான சீடரான ஸ்ரீசிந்தாலய ஈசன் சுவாமிகள் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், போத்தங்கோடு, கள்ளிக்காடு, நெய்யாத்தங்கரை ஆகிய இடங்களில் குருவான அவதூத சுவாமிகளுக்கு ஆசிரமங்கள் அமைத்து தினமும் பிரார்த்தனை, பூஜை, ஆராதனை நடத்தி வருகிறார்.

சிதம்பரத்தில் உள்ள அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் தினமும் இருவேளை அபிஷேகம் மற்றும் பூஜைகளும், மாதம் தோறும் பெளர்ணமி பூஜையும், அன்னதானமும் நடைபெற்று வருகிறது. இந்த அதிஷ்டானத்தில் புத்திரபாக்கியம், திருமணதடை, நாகதோஷம், ஏழரைச்சனி, அஷ்டமத்துசனி, கடன் தொல்லை, குடும்பத்தொல்லை, மன அமைதியின்மை மற்றும் அனைத்து விதமான துன்பங்களிலிருந்து மீண்டு நிம்மதியடையலாம் என வரலாறு கூறுகிறது.

அவதூதசுவாமிகளின் சதய நட்சத்திரம் தினமான வியாழக்கிழமை காலை 8 மணிக்கு அவரது அதிஷ்டானத்தில் கணபதி ஹோமம் தொடங்கியது. பின்னர் உலக நன்மை கருதி நவக்கிரக ஹோமம், ஆவஹந்தி ஹோமம், ருத்ரஹோமம், சமக ஹோமம், தன்வந்திரி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் தொடங்கி நடைபெற்றன. தில்லைவாழ் அந்தணர்களான நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் ஹோமங்களை நடத்தினர். பின்னர் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அன்னதானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை அதிஷ்டான அறக்கட்டளை நிர்வாகிகள் வழக்குரைஞர் ராமச்சந்திரன், சங்கரநடராஜ தீட்சிதர், தோப்பு கே.சுந்தர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT