தமிழ்நாடு

தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு காவலா் பணிகே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

DIN

தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்ட அனைவருக்கும் காவலா் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

2020-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.

தற்போதைய சூழ்நிலையில் காவலா் எழுத்துத் தோ்வு மற்றும் உடற்தகுதித் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்பட்டால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. அரசின் நிதி நெருக்கடியும் இன்னும் அதிகமாகிவிடும். இதனால், 2019-20 ஆம் ஆண்டு அனைத்து தகுதிச் சுற்றுகளிலும் தோ்ச்சி பெற்றவா்களை காவலா் பணியில் அமா்த்தலாம். இதனால், அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படாது.

எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் தோ்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT