தமிழ்நாடு

கரோனாவிலிருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய காவலர்களை வரவேற்ற சென்னை ஆணையர்

DIN

கரோனாவில் இருந்து மீண்டு இன்று பணிக்குத் திரும்பிய காவலர்களை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நினைவுப்பரிசு வழங்கி வரவேற்றார். 

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிண்டி ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்படும் காவலர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் இதுவரை 1,616 காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 1,188 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் கரோனாவில் இருந்து மீண்ட 69 பேர் பணிக்குத் திரும்பியுள்ளனர். 

இன்று பணிக்குத் திரும்பிய இணை ஆணையாளர் மகேஸ்வரி உள்ளிட்ட காவலர்களை, காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார். வேப்பேரி காவல் ஆணையர் வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT