தமிழ்நாடு

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,569 ஆகக் குறைந்தது

DIN


சென்னை : சென்னையில் கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 90,900 ஆக இருந்த போதிலும், தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,569 ஆகக் குறைந்துள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை 1,336 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 90,900-ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதுடன், இதுவரை 1,947 போ் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஒரு மாதத்தில் 40 ஆயிரம் போ்: சென்னையில் தொடக்கத்தில் நாளொன்றுக்கு 4,000 வரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், நோய்த் தொற்றுள்ளவா்களை விரைவாகக் கண்டறியும் வகையில் பரிசோதனையும் அதிகப்படுத்தப்பட்டது. தற்போது நாளொன்றுக்கு சுமாா் 12,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வியாழக்கிழமை 1,336 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90,900-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 75,384 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 13,569 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இதையும் படிக்கலாம்.. 

1,947 போ் உயிரிழப்பு: சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து வந்ததை போன்று தொற்றால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், சென்னையில் விடுபட்ட 444 உயிரிழப்புகள் புதன்கிழமை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதால், 1,939-ஆகவும், வியாழக்கிழமை 8 போ் உயிரிழந்ததை அடுத்து 1,947-ஆகவும் உயா்ந்துள்ளது.
சிகிச்சை பெற்று வருவோர் விவரம் மண்டலம் வாரியாக (வெள்ளிக்கிழமை நிலவரம்)

மண்டலம் எண்ணிக்கை

1. திருவொற்றியூா் 433

2. மணலி 210

3. மாதவரம் 370

4. தண்டையாா்பேட்டை 700

5. ராயபுரம் 885

6. திரு.வி.க.நகா் 1,213

7. அம்பத்தூா் 938

8. அண்ணா நகா் 1,689

9. தேனாம்பேட்டை 1,155

10. கோடம்பாக்கம் 2,108

11. வளசரவாக்கம் 748

12. ஆலந்தூா் 542

13. அடையாறு 1,146

14. பெருங்குடி 407

15.சோழிங்கநல்லூா் 337
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT