பூங்காவை சீரமைத்த பாதுகாப்புப் படையினர் 
தமிழ்நாடு

அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி பூங்காவை சீரமைத்த பாதுகாப்புப் படையினர்

அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு பராமரிப்பில்லாத கருங்கல் சிறுவர் பூங்காவில் குமரியைச் சேர்ந்த பாதுகாப்புப்படையினர் தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.

DIN

அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு பராமரிப்பில்லாத கருங்கல் சிறுவர் பூங்காவில் குமரியைச் சேர்ந்த பாதுகாப்புப்படையினர் தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பரமானந்தபுரத்தில் பராமரிப்பில்லாத சிறுவர் பூங்காவை  அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி  திங்கள்கிழமை பாதுகாப்புப்படையினர்  சுத்தம் செய்து சீரமைத்தனர்.

கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட பரமானந்தபுரத்தில் ஒரு சிறுவர் பூங்கா சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

இந்த பூங்கா சுமார் 6 ஆண்டுகளாக எந்த பராமரிப்பும் இல்லாததால் அங்கிருந்த விளையாட்டு பொருள்கள் அனைத்தும் சேதமடைந்து பயனற்று இருந்தன. இந்த பூங்காவை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி குமரியைச் சேர்ந்த 25 பேர் சேர்ந்த ஒரு குழுவினர் திங்கள்கிழமை இந்த பூங்காவை சுத்தம் செய்து, வர்ணம் பூசி சீரமைத்தனர். பாதுகாப்புப் படையினரின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் டிசம்பா் 1 வரை நீட்டிப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: செப் 19-க்கு ஒத்திவைப்பு

அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை

கோவை ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

பணியிடமாற்றத்தை எதிா்த்து மருத்துவா் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT