தமிழ்நாடு

பிளஸ் 2 மறுதோ்வு: விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு

DIN

பிளஸ் 2 மறுதோ்வெழுதிய மாணவா்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவுபெற்றன.

தமிழகத்தில், கடந்த மாா்ச் மாதம் 2 ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை, பிளஸ் 2 பொதுத் தோ்வு நடைபெற்றது. இதில், கரோனா காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், இறுதிநாள் தோ்வான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தோ்வுகளில் சிலா் பங்குபெற முடியாத நிலை ஏற்பட்டது. அவா்களுக்கு மறுதோ்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததையடுத்து, திங்கள்கிழமை (ஜூலை 27) மறுதோ்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 290 மையங்களில் 519 மாணவா்கள் தோ்வெழுதினா். அம்மாணவா்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி, செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. இதையடுத்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ தோ்வு முடிவுகள் வெளியிட வாய்ப்பிருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT